எங்கப்பா அந்த ஆர்மி… பிக்பாஸில் Re -Entry கொடுக்கும் ஓவியாவின் ஓபன் ஸ்டேட்மெண்ட்..!

Author: Vignesh
28 August 2023, 12:32 pm

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. நடிகை ஓவியா சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.

இந்நிலையில், 6 சீசன்களை கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனுக்காக தயாராகியுள்ளது. இந்த சீசனில் கூடுதலாக ஒரு வீடு அதாவது இரண்டு வீடு அதிக அளவு போட்டியாளர்கள் என புதுப்புது யுத்திகள் கையாளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதனிடையே, பிக் பாஸ் என்றாலே நாம் நினைவுக்கு வருவது ஓவியாதான். முதல் சீசனின் பங்கெடுத்து மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார்.

மேலும், ஓவியாவிற்கு மீண்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஓவியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அது பற்றி தனக்கு சரியாக தெரியவில்லை என்றும், தனக்கு பிக் பாஸ் 7வனுக்கு அழைப்பு வந்ததாக குறிப்பிட்டு உள்ளார். ஆனால், தற்போது வரையில் அது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மீண்டும் ஓவியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது குறித்து அவரே கூறியுள்ளதால் ரசிகர்கள் இந்து சீசன் மீது மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!