நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது.
அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது. இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் தற்போது அசோக் செல்வன் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
அந்த பெண்ணும் ஒரு நடிகை தான். ஆம் பிரபல வில்லன் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை தான் அசோக் செல்வன் திருமணம் செய்யவுள்ளார். இந்த திருமணம் பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்திருந்தனர்.
இதனிடையே வரும் செப்டம்பர் 13-ம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
இந்நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அசோக் செல்வனின் காதலுக்கு முக்கிய நபராக இருந்தது இயக்குனர் பா. ரஞ்சித் தானாம். ஆம் ப்ளூ ஸ்டார் படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் தான் நீளம் ப்ரோடுக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார். அவர் மூலமாக தான் அசோக் செல்வனுக்கு கீர்த்தி பாண்டியன் உடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.