சின்ன படங்களை எடுப்பதில் இருந்து ரிலீஸ் செய்து ஓடிடியில் விற்பது வரை சவாலாக இருந்தாலும், தயாரிப்பாளர்களுக்குப் பெரிய நம்பிக்கை திரையரங்குகள் மட்டும்தான் என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
சென்னை: ஜி.வி.பிரகாஷ் குமாரின் நடிப்பில், 25வது படமாக உருவாகியுள்ள படம் கிங்ஸ்டன். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பா.ரஞ்சித், “ஜி.வி.பிரகாஷ் இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்தே பயங்கர நம்பிக்கையோடு படத்தைப் பற்றி பேசுவார். படத்துடைய விஷுவல்சையும் காட்டி இந்தப் படம் நிச்சயமா ஒர்க் ஆகும் என்று சொல்வார்.
பட்ஜெட்டை மீறி செலவு செய்கிறோம் என்கிற பயம் கூட இல்லாமல், ஃபர்ஸ்ட் டைம் இயக்குநருக்கு அவர் வாய்ப்பு கொடுத்தது முக்கியமான விஷயம். இன்றைய சூழலில் நம்பிக்கை என்பது ரொம்பவும் முக்கியம். இன்று நம்மிடம் பெரிய பொருளாதாரம் இல்லை. VFXல் சூப்பரா ஒரு படம் பண்ணுவது என்பது சவாலான விஷயம்.
அந்த சவாலை குறைவான பட்ஜெட்டில் இந்த டீம் செய்திருக்கிறார்கள். நாங்கள் எந்தப் படம் பற்றிப் பேசினாலும் கிங்ஸ்டன் படத்தைப் பற்றி ஜி.வி. பேசிக்கொண்டே இருப்பார். நீண்ட நாட்களாக படத்தை விற்பதற்கு முயற்சி செய்துகொண்டே இருந்தார். நிச்சயம் மக்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.
ஏனென்றால், ட்ரெய்லர் அந்த அளவு நன்றாக உள்ளது. தமிழ் சினிமாவில் படம் எடுத்து, அதை ரிலீஸ் செய்வது என்பது மிகப்பெரிய சவாலான நிலை. இந்த நேரத்தில் இது மாதிரியான கதையை நம்பி படம் எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம்.
அதை அடைய போராடிக் கொண்டிருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். எனக்கு கதை அந்தளவிற்குச் சொல்ல வராது. பாடலுக்கான சூழ்நிலையும் அப்படித்தான். ஆனால், நாம சொல்ல வரும் விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்கிற ஒரு நல்ல டெக்னீஷியன் அவர். அதுபோல எனக்கு சந்தோஷ் நாராயணனுக்கு அடுத்து ஜி.வி.தான்.
இதையும் படிங்க: 7 முறை கருக்கலைப்பு செய்தேன் என்றால் அது சாதனையே.. சோளக்காட்டில் அப்படி.. சீமான் பரபரப்பு பேச்சு!
நான் அடுத்து இயக்கும் வேட்டுவம் படம் பற்றி அவரிடம் பேசிட்டு இருந்தேன். கதையை நான் சொல்லவேயில்லை. ஆனால், அதற்குள் அவர் மூன்று டியூன் தயார் செய்யும் அளவிற்குப் போய்விட்டார். சின்ன படங்களுக்குத் தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன், டிராகன் படம். சின்ன படங்களை எடுப்பதில் இருந்து ரிலீஸ் செய்து ஓடிடியில் விற்பது வரை சவாலாக இருந்தாலும், தயாரிப்பாளர்களுக்குப் பெரிய நம்பிக்கை திரையரங்குகள் மட்டும்தான்” எனக் கூறினார்.
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
அஜித் நடிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும்…
நெட்பிளக்ஸில் விரைவில் வெளியாகும் படம் டெஸ்ட். மாதவன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதையும்…
ரஜினிகாந்தின் கூலி படத்தில் இணைந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை:…
திருமணம் செய்து கொள்ளாமல் பல பிரபலங்கள் இன்று வரை சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் உள்ள நடிகை காதலும்…
This website uses cookies.