ஐயப்பனை இழிவுப்படுத்திய பா. ரஞ்சித், இசைவாணி : வெளியான வீடியோ.. வலுக்கும் எதிர்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
23 November 2024, 11:50 am

நீலம் பண்பாட்டு மையம் நடத்திய நிகழ்வில், கானா பாடகி இசைவாணி “ஐ எம் சாரி ஐயப்பா… உள்ளே வந்தா தப்பாப்பா” என்ற பாடலை பாடினார். இந்த பாடல் ஐயப்பன் குறித்தும், கடவுள் நம்பிக்கை குறித்தும் இழிவுப்படுத்தும் விதமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாடல் இணையத்தில் பரவலாக டிரெண்டாகிய நிலையில், பலர் அதனை கண்டித்தனர். குறிப்பாக, நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டதை குறிப்பிடுவோரும், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை கேள்வியாக எழுப்பினர்.

“கஸ்தூரிக்கு ஒரு நியாயம், இசைவாணிக்கு ஒரு நியாயமா?” என்ற கேள்வி சமூக ஊடகங்களில் பெரிதாக எழுந்தது. இந்த விவகாரத்தில், கானா இசைவாணி மற்றும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான நீலம் பண்பாட்டு மையத்துக்கு எதிராக கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: HM காரில் விழுந்த துடைப்பம்.. மாணவருக்கு எலும்பு முறிவு.. அரசுப் பள்ளியில் தொடரும் அவலம்!

ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினரும், இந்து கடவுள் ஐயப்பன் குறித்தும், அவருக்கு மேற்கொள்ளப்படும் விரதங்களை இழிவுபடுத்தியதாக புகார் கூறியுள்ளனர். நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கும் பாடல் பாடியவர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!