ரஜினியை அவமானப்படுத்திய பா.ரஞ்சித்:தாறுமாறாக தாக்கிய ரசிகர்கள்…போஸ்டை டெலீட் செய்த சம்பவம்..!

Author: Selvan
12 December 2024, 9:57 pm

பா. ரஞ்சித்தின் சர்ச்சையான பதிவு

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Rajinikanth Birthday Controversy

இந்நிலையில்,இயக்குனர் பா. ரஞ்சித் தனது சமூக வலைத்தளப் பதிவில், ரஜினிகாந்தின் பிறந்தநாளை,வாழ்த்திய பதிவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பா. ரஞ்சித் தன்னுடைய X தள பதிவில், நடிகர் ரஜினிகாந்தின் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இதையும் படியுங்க: சவுண்ட ஏத்து.. தேவா வரார் வழிவிடு.. தலைவரின் செம லுக் : கூலி Chikitu Vibe!

ஒரு சூப்பர்ஸ்டாரின் மரியாதையை குறைக்கும் வகையில் இப்படி ஒரு புகைப்படத்தை எப்படி பகிர்ந்தார்? என்று பலர் கேள்வி எழுப்பினர்.

இதனால் ஏற்பட்ட நெருக்கடியை உணர்ந்த பா. ரஞ்சித், தனது முன்பதிவை உடனடியாக நீக்கினார். பின், காலா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மாஸான புகைப்படத்தை பகிர்ந்து புதிய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி, திரையுலகத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!