விக்ரமின் உழைப்பை வீணடித்துவிட்டார் பா.ரஞ்சித்… சியான் ரசிகர்கள் கொந்தளிப்பு!

Author:
15 August 2024, 10:36 am

சீயான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இடையில் உருவாகி வந்த இந்த திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜி வி பிரகாஷ் இசையமைப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகி வெளிவந்திருக்கிறது. இந்த திரைப்படம் இன்று சுதந்திர தின கொண்டாட்டமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த ஆடியன்ஸ் எல்லோருமே கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இப்படத்தைப் பார்த்த ஆடியன்ஸ் எல்லோரும் படத்தில் விக்ரமின் நடிப்பு மிகப் பிரம்மாதமாக இருப்பதாகவும் அவரது உழைப்பு அவ்வளவு அருமையாக இருப்பதாகவும் பாராட்டி வருகிறார்கள். மேலும், ஜிவி பிரகாஷின் இசை மற்றும் விசுவல் ட்ரீட் இது எல்லாமே படத்திற்கு பக்க பலமாக இருப்பதாக கூறி வருகிறார்கள். இருந்தாலும் கதையை சுத்தமாக பிடிக்கவில்லை என பலரது பரவலான கருத்தாக இருக்கிறது.

thangalaan

படத்தின் கதை முதல் 20 நிமிடத்திற்கு புரியவே இல்லை என பலர் விமர்சித்துள்ளனர். மேலும் சிலர் இது பா ரஞ்சித்தின் வீக்கஸ்ட் திரைப்படம். விக்ரமின் உழைப்பை ரஞ்சித் வீணடித்துவிட்டார் என சியான் ரசிகர்கள் கொந்தளித்து விமர்சித்துள்ளனர். இதன் மூலம் படத்திற்கு ஒரு தரப்பு நல்ல பாராட்டுகளையும் மறுத்தரப்பு விமர்சனங்களையும் குவித்து வருவதால் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது தங்கலான் திரைப்படம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ