விக்ரமின் அசுர வெற்றிக்கு இவங்க தான் காரணம்… பா. ரஞ்சித் பேச்சு!

Author:
20 August 2024, 7:28 pm

சீயான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் உருவாகி வந்த இந்த திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜி வி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகி இருந்தது. இந்த திரைப்படம் சுதந்திர தின கொண்டாட்டமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இப்படம் ரூ. 100 முதல் ரூ. 150 கோடி செலவில் எடுக்கப்பட்டு இதுவரை ரூ. 65 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குனரான பாராஞ்சி தங்கலான் படத்தில் நடித்த எல்லோருமே கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். என் மீது அன்பு உடையவர்களால் மட்டும்தான் இவ்வளவு சிறப்பான உழைப்பு கொடுக்க முடியும். இந்த அன்பு தான் என்னை இன்னும் அதிகமான உயரத்திற்கு உயரத்திற்கு கொண்டு சென்று உழைக்க வைக்கிறது .

தற்போதுள்ள சமூகத்திற்கு மிகவும் தேவையான படமாக தங்கலான் அமைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா நடிகர்களும் அவர்களுக்கு ஏற்ற சூழலில் தான் நடிப்பேன் என அடம் பிடிப்பார்கள். ஆனால் நடிகர் விக்ரம் தன்னுடைய முழு உழைப்பையும் இந்த படத்திற்காக அர்ப்பணித்திருக்கிறார்.

அவர் இவ்வாறு கடினமாக உழைக்க இரண்டே இரண்டு விஷயம்தான் முக்கிய காரணம் சினிமாவில் உள்ள காதலும்… ரசிகர்களின் மீது உள்ள அன்பும் தான் விக்ரம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார். எனவே சினிமாவை நேசிக்கும் இவருக்கு தங்கலான் படம் மிகப்பெரிய தீனியாக அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என அந்த பேட்டியில் பா ரஞ்சித் மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார்.

  • Game Changer Shankar songs cost“கேம் சேஞ்சர்”பட பாடலுக்கு இத்தனை செலவா…கோடிகளை மட்டுமே குறிவைக்கும் சங்கர்..!
  • Views: - 149

    0

    0