தமிழ் சினிமாவில் பல கமர்சியல் படங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவருடைய இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா.
இந்த திரைப்படம் இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்த படமாக உள்ளது. மேலும், படையப்பா படம் வணிக ரீதியாக மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது. படையப்பா படம் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவருக்குமே திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம். அந்த அளவிற்கு அவர்களது கெரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணனுக்கு பல படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். இந்த நிலையில், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் படையப்பா படப்பின் போது நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளை, ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், படையப்பா படத்தில் ஒரு ஊஞ்சல் காட்சி வரும். ரஜினி தன்னுடைய துண்டால் ஊஞ்சலை கீழே இறங்கி விடுவார். அந்தக் காட்சிகள் எடுக்கும்போது பத்துக்கும் மேற்பட்ட டேக்குகள் ரவிக்குமார் எடுத்தாராம். அந்த காட்சி எடுக்கும்போது ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் விழுந்து விழுந்து சிரித்து விடுவார்களாம்.
இப்படி பல போராட்டங்களுக்குப் பின் அந்த காட்சியை ஒருவழியாக எடுத்த முடித்தாராம் கேஎஸ் ரவிக்குமார்.
மேலும், படையப்பா படத்துக்கு 2 கிளைமாக்ஸ் என்று தெரிவித்துள்ளார். ஒன்று மாடு குத்த வரும், நீலாம்பரியை படையப்பா காப்பாற்றியதால், நீலாம்பரி திருந்தி ரஜினி காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது மற்னொன்று நீ கொடுத்த உயிர் பிச்சையில் வாழ முடியாது என நீலாம்பரி தன்னைத்தானே சுட்டுக் கொள்வது.
இதனிடையே, முதல் கிளைமாக்ஸை வைக்கலாம் என்று கேஸ் ரவிக்குமார் சொன்னதும், ரஜினி மறுத்து 2ம் கிளைமாக்ஸை வைக்கலாம் என்று கூறிவிட்டாராம்.
இதை வைத்தால் உங்கள் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், இந்த படத்தில் வில்லி மாஸ் ஆகி விடுவார் என கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்தும், வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். ஆனால், ரஜினி வற்புறுத்தியதன் பேரில் அந்த கிளைமாக்ஸ் வைக்கப்பட்டது எனவும், தற்போது இதுதான் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்திருக்கிறது என கே எஸ் ரவிக்குமார் உருக்கத்துடன் பேசி உள்ளார்.
இதுபோன்று படையப்பா படத்தில் பல கலவரங்கள் நடந்து உள்ளது என சமீபத்திய பேட்டி ஒன்றில் கேஎஸ் ரவிக்குமார் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.