அந்த படத்தில் வரும் குட்டி ரஜினி யார் தெரியுமா?.. சரத்குமாரின் ரீல் தங்கையின் முன்னாள் கணவராம்..!

Author: Vignesh
20 February 2024, 1:25 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

rajini - updatenews360

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்து படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனத்தை பெற்றது. லால்சலாம் படம் முடித்த நிலையில், ரஜினி டிஜே ஞானவேல் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

rajini - updatenews360

இந்த நிலையில், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் இணைந்து நடித்த படிக்காதவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த விஷயம். இந்த படத்தில் குட்டி ரஜினி ஆக வந்த சிறுவனை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ரஜினியின் இளம் வயதில் நடித்த அந்த சிறுவன் வேறு யாருமில்லை மாஸ்டர் சுரேஷ் தான். இவருடைய இயற்பெயர் சூரிய கிரன் மாஸ்டர் சுரேஷ் ரஜினி படங்கள் மட்டுமின்றி கமல், விஜயகாந்த், பிரபு, சிரஞ்சீவி, நாகர்ஜுனா, அமிதாப்பச்சன் உடன் இணைந்து மொத்தம் 200 படங்களில் நடித்திருக்கிறார்.

ps - updatenews360

நடிகர் மாஸ்டர் சுரேஷ் சமுத்திரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு சகோதரியாக நடித்த காவிரியை திருமணம் செய்து கொண்டு, அதன் பின் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் பெற்றார். மேலும், மாஸ்டர் சுரேஷ் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜாதாவின் அண்ணன் என்பது பலரும் அறிந்திடாத விஷயம்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!