பகல்காமில் நடந்த லியோ படப்பிடிப்பு… தாக்குதல் நடந்த இடத்தில்தான் : ஒளிப்பதிவாளரின் உருக்கம்!
Author: Udayachandran RadhaKrishnan23 April 2025, 5:17 pm
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய ஹிட் அடித்தது.
இந்த படம் முழுவதும் பகல்காம் பகுதியில்தான் படப்பிடிப்பு நடந்தது என லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: நெட்பிலிக்ஸை விரட்டியடிக்காம தூங்கமாட்டாங்க போலயே- நயன்தாராவால் மீண்டும் வந்த வினை?
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தள பக்கத்தில், லியோ படம் முழுவதும் பகல்காமில்தான் நடத்தனோம். ஆனால் அழகான சிறிய நகரத்தில் மோசமான நினைவுகளை என்னுடன் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை, பகல்காம் தாக்குதல் சோகம் என பதிவிட்டுள்ளார்.

இயற்கை மிகுந்த அழகான பகல்காம் நகரத்தை, மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு அழகிய நகரத்தில் நேற்று மாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது.