அப்படி ஆடை அணிந்தால் உள்ளவே சேர்க்க மாட்டேன் – ஷூட்டிங்கில் சல்மான்கான் கறார்!

Author: Shree
13 April 2023, 10:20 pm

இந்தி சினிமாவின் அதிரடி ஆக்ஷன் நடிகரான சல்மான் கான் தற்போது அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான வீரம் படத்தின் இந்தி ரீமேக் கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியா நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில், ஜெகபதி பாபு, பூமிகா சாவ்லா, ராகவ் ஜூயல், சித்தார்த் நிகம், ஜாஸ்ஸி கில், வினாலி பட்நாகர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் அடேய்… தல படத்தை என்னடா பண்ணிவச்சிருக்கீங்க? என திட்டி தீர்த்தனர்.

இந்நிலையில் தற்போது பிரபல இந்தி நடிகை பாலக் திவாரி சல்மான் கான் குறித்து பேட்டி ஒன்றில், சல்மான் கான் அவரது பட ஷூட்டிங்கில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு வைத்திருப்பார் என கூறியுள்ளார். அவரது ஷூட்டிங் என்றாலே பெண்கள் எப்போதும் முழுவதும் உடலை மறைக்கும் உடைகளை தான் அணிந்து வர சொல்வார்களாம். லோ நெக் உடைகள் எல்லாம் கண்டிப்பாக அணியவே கூடாது என கண்டிப்பார்கள் என பாலக் திவாரி கூறி இருக்கிறார். இது பலரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.

  • Aadukalam movie casting controversy என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!