விஷ்ணு- சம்யுக்தா பிரிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தான் காரணம்?.. – பொங்கி எழுந்த கணவன்..!
Author: Vignesh26 May 2023, 11:00 am
சீரியல் நடிகை சம்யுக்தா திருமணம் ஆன ஒரு மாதத்தில் சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
இந்நிலையில், விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது நிறைமாத நிலவே சீரியல் நடித்த ரவி என்பவரை காதலித்து பிரேக்கப் ஆன பின்பும் அவருடன் பேசி இருப்பதாக பெரிய குண்டை துக்கிபோட்டு உள்ளார்.
இதற்கான ஆதாரம் இருக்கிறது என்று தெரிவித்து ஒரு ஆடியோவை வெளியிட்டு உள்ளார் விஷ்ணுகாந்த். அதில், ஆடியோவில் அண்ணனாக பேசியவருடன் தன்னிடம் காதலித்த போது தவறாக நடந்து கொண்ட ரவியிடம் பேசாமால் இருக்க முடியவில்லை என்று பல விதமான காரணங்களை சம்யுக்தா தெரிவித்துள்ளார். இப்படி அரை மணி நேரம் சம்யுக்தா பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் விஷ்ணுகாந்த் சம்யுக்தா இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை தான் காரணம் என்று தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது காதலிக்கும் போதே விஷ்ணு சம்யுக்தாவிடம் அந்த நடிகையோடு பேச வேண்டாம் என்று கூறியதாகவும், அவர் ஒரே பாலினத்துடன் தகாத உறவை மேற்கொள்பவர் என்று விஷ்ணுகாந்த் சம்யுக்தாவிடம் கூறியதாகவும்,
ஆனால் அந்த நடிகை சம்யுக்தாவின் நெருக்கமான தோழி, அவரை பற்றி எல்லாமே இவருக்கு தெரியும் என்றும், இருந்தும் விஷ்ணு தனது தோழியை தவறாக பேசுகிறார் என்று அப்போது இருந்தே இந்த பிரச்சனை தொடங்கியதாக, சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஷ்ணுவிடம், அந்த நடிகையும் சம்யுக்தாவும் ஒரே பாலினத்துடன் தகாத உறவை செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு விஷ்ணுகாந்த், இல்லை என்று சொல்லாமல் உண்மை தான் என்ற அளவுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும் அந்த நடிகை வேற யாரும் இல்லை என்றும், சிப்பிக்குள் முத்து ஹீரோயினும், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடிக்கும் லாவண்யா தான் எனவும், இவரை தான் மறைமுகமாக விஷ்ணு சொல்லி இருப்பதாக தற்போது முணுமுணுக்கப்படுகிறது. ஆனால் விஷ்ணுகாந்த் ஓப்பனாக சொல்லி இருந்தால் ரசிகர்களிடம் தர்ம அடி வாங்கி இருப்பார் என்று சம்யுக்தா விஷ்ணுக்கு பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.