இனி நாங்கள் ரீல் ஜோடி கிடையாது.. ஒரு வழியாக காதலை உறுதிப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்..!
Author: Vignesh22 June 2023, 3:45 pm
கண்ணனுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் vj தீபிகா. இவர் மேக்கப் போடுவதால் முகத்தில் நிறைய பருக்கள் ஏற்பட்ட நிலையில், இவரை தொடரில் இருந்து வெளியேற்றிவிட்டனர். சீரியல் குழுவினர் முகத்தை சரி செய்ய வாய்ப்பு கொடுத்தும் தன்னால் முடியவில்லை எனஅவரே கூறியிருந்தார்.
சீரியலில் இருந்து வெளியேறிய பின் vj தீபிகா யூடியூப் பக்கம் தொடங்கி நன்றாக சம்பாதிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் தான் தீபிகா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யாவாக நடிக்க மீண்டும் வாய்பு வந்துள்ளது.
இதனிடையே, கண்ணன் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் சரவணன் மற்றும் தீபிகா ஜோடியாக நடித்து வருகிறார்கள், இவர்கள் காதலிப்பதாக சில ரசிகர்கள் பேசினாலும், இதுவரை அவர்கள் உறுதிப்படுத்தாமலேயே இருந்து வருகின்றனர். இந்த நிலைப்பில்தான் நடிகை தீபிகா சரவண விக்ரமுடன் இருக்கும் படத்தை ஸ்டோரியில் பகிர்ந்து நாம் ஒன்றாக இருக்க வேண்டும் அதுதான் டீல் மை டியர் என பதிவு செய்துள்ளானர். இதனால் இவர்கள் காதலிப்பதாக ரசிகர்கள் உறுதிப்படுத்தி வருகின்றனர்.