அடடா.. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை அஜித்தின் தங்கையா?… வைரலாகும் புகைப்படம்..!
Author: Vignesh31 January 2023, 11:30 am
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது குணச்சித்திர வேடங்களிலும், சீரியல் தொடர்களிலும் பிரபலமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. 100ற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் 50திற்கும் மேற்பட்ட சீரியல் தொடர்கள் என தென்னிந்திய வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தனக்கென்ற பெயர் பெற்றவர்.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். டிஆர்பியில் முன்னிலை வகித்து வரும் இத்தொடரில் தனம் என்ற கதாபத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா துறையில் பயணித்து வரும் இவர், தனக்கென தனி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், 1000 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் சுஜிதா பல படங்களில் நடித்து வந்தவர் என்பது நாம் அனைவருக்குமே தெரியும்.

இதனிடையே, மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வாலி திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்த அசத்து இருந்தார். அவர் அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படம் இப்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.