என் வாழ்க்கையை மாற்றியது இவர் தான்..! – மனம் திறந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா..!

Author: Vignesh
17 January 2023, 5:30 pm

என் வாழ்க்கையை மாற்றியது சிவ வழிபாடு தான் என்று பேட்டியொன்றில் கம்பம் மீனா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் கம்பம் மீனா. இவரது நிஜப்பெயர் நாச்சிமுத்து மீனா. கம்பம் மீனா முதன்முதலாக தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் தான் நடிக்க தொடங்கினார்.

kambam meena pandian stores - updatenews360

2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா தெற்கத்திபொண்ணு சீரியல் தேனி மாவட்டத்தில் எடுத்துக் கொண்டிருந்தபோது கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார் கம்பம் மீனா.

இவர் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி என பல சீரியல்களில் பிஸியாக தற்போது நடித்து வருகிறார்.

kambam meena pandian stores - updatenews360

சின்ன கிராமத்திலிருந்து வந்து கம்பம் மீனா இன்று சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே தன்னுடைய உழைப்பால் பயங்கரமாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பல கஷ்டங்களை கடந்து வந்த கம்பம் மீனா “என் வாழ்க்கையை மாற்றியது சிவ வழிபாடு தான்” என்று தெரிவித்துள்ளார்.

kambam meena pandian stores - updatenews360
  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்