5 வருடமாக அரைத்த மாவை அரைத்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்.. கடைசி காட்சி இதுதான்..!

Author: Vignesh
28 October 2023, 10:55 am

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் கொண்டு TRPயில் இடம்பிடித்து வரும் சீரியல் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர், நாளடைவில் ஜவ்வு போல இழுப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

இடையில் கதைக்களத்தில் விறுவிறுப்பு இல்லாமல் செல்ல ரசிகர்கள் தொடரை நிறைய கலாய்த்து வந்தார்கள். அட சீரியலை முடிங்கப்பா என ரசிகர்கள் கதறி நிறைய மீம்ஸ், வீடியோக்களை வெளியிட்டும் இயக்குனரை சாடியும் வந்தனர்.

PandiyanStores

இந்நிலையில், தமிழ்நாட்டின் முன்னணி மெகா தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வரப்போவதாக அதிகாரப்பூர்வ வீடியோ வெளியாகியுள்ளதை
பார்த்த ரசிகர்கள் அட சூப்பர் நல்ல முடிவு என தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

pandian stores -updatenews360

மேலும், இந்த தொடர் 5 வருடத்தை எட்டிவிட்டது, ரசிகர்களும் சீரியல் குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தொடர் முடிவுக்கு வந்துவிட்டது, இன்று 28 அக்டோபர் 2023 பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி எபிசோட் ஒளிபரப்பாகும் நாள்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…