சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.
அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே, சினிமாவில் முன்னணி நடிகராக டாப்பில் இருக்கும் இவர் இப்போது கமிட் செய்துள்ள படத்தை முடித்த கையோடு முழுநேர அரசியலில் இறங்க இருப்பதாக அறிவித்துள்ளார். ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும், அவர் நடிக்கப் போவதில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயமாகவே உள்ளது. இந்நிலையில், விஜய் அரசியல் கட்சி பெயர் அறிவித்ததில் இருந்து நிறைய விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. நிறைய பாராட்டுக்கள் பல எதிர்மறை விமர்சனங்கள் என வருகின்றன.
மேலும், கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்து இருந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அண்ணன் தம்பிகளில் ஒருவராக நடித்த வெங்கட் ரங்கநாதன் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு கண்கலங்கி பேசியுள்ளார்.
அதில், நாம் எல்லோருடைய வாழ்க்கையிலுமே கனவுகள் இருக்கும் அந்த கனவை நிறைவேற்ற முயற்சிகள் செய்து கொண்டிருப்போம். என் வாழ்க்கையிலும், பல கனவுகள் இருக்கும். அதில், முக்கியமான கனவு விஜய் அண்ணா கூட ஒரு படத்தில் ஒரு காட்சியில் ஆவது நடித்துவிட வேண்டும் என்பது தான். இரவு தூங்கும் போது கூட கடவுளிடம் வேண்டிக் கொள்வேன். எப்படியாவது, ஒரு காட்சியில் கூட நிற்பது போலவாவது நடித்துவிட வேண்டும் என வேண்டுவேன் நேற்றும் வேண்டினேன் அதற்கு முந்தைய நாளும் வேண்டினேன் என்று கண்கலங்கி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அடுத்த படத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் வருத்தப்படாதீங்க என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.