அத சொல்ல நீ யாரு?.. பீரியட்ஸ் டைம்லையும் கோவிலுக்கு போவேன்; சீரியல் நடிகையின் சர்ச்சை பேட்டி..!
Author: Vignesh12 July 2024, 11:07 am
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம், தமிழகமெங்கும் பிரபலமானவர் விஜே தீபிகா. இதில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவாக, சீரியலில் குறுகிய காலமே நடித்தாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு முகப்பரு சிகிச்சைக்காக தீபிகா, சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார்.
தீபிகா ஒருமுறை பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது ஆங்கரிங் பயணம், சீரியல், வெற்றி தோல்வி, குடும்பம் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். வீடியோவில் தீபிகா பேசுகையில்; நான் வீட்டுல மூனாவது பொண்ணு. எனக்கும், அக்காவுக்கும் கிட்டத்தட்ட 10 வயசு வித்தியாசம். என் அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் 60 வயசு மேல ஆகுது. நான் மீடியாவுக்கு வர்றதுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே ரொம்ப பயந்தாங்க. சொந்தகாரங்க திட்டும்போது ரொம்ப வருத்தப்படுவாங்க.
எந்தவொரு ஃபங்ஷனுக்கு போனாலும், ஏதாவது ஒன்னு கேட்டு அம்மாவ அழ வச்சுடுவாங்க. அம்மா அழுதுட்டே வந்து புலம்புவாங்க. இப்போவே நிறைய பேரு நீ படிச்சிருக்க.. உனக்கு வீடு, குடும்பம் பாக்கணும்னா, நீ படிச்ச வேலைக்கு போலாமே. ஏன் இதை பண்றனு கேட்பாங்க. ஆனா, இது என்னோட ஆசை. அதேநேரத்துல நான் இதுக்காக ஓடுறேன்னு என் அம்மா, அப்பாவையும் விட முடியாது. ரெண்டையுமே பேலன்ஸ் பண்ணனும்.
மீடியாவுக்கு வந்த புதுசுல நிறைய பொய் சொல்லிருக்கேன். நான் சென்னையில ஹாஸ்டல்ல இருந்தேன். என் அம்மா, அப்பா ஊருல இருப்பாங்க. அப்போ லோக்கல் சேனல்ல வேலைப் பாத்தேன். என்னோடது லைவ் ஷோ. நைட் 7-8 வரை ஆஃபிசுல இருக்கணும். அப்புறம்தான் ஹாஸ்டல் வரமுடியும். என்னோட ஸ்டுடியோ தேனாம்பேட்டையில இருக்கும். நான் சூளைமேட்டுல ஹாஸ்டல்ல இருந்தேன். வேலை முடிச்சு, ஹாஸ்டல் வரதுக்கு நைட் 9.30 ஆயிடும். ஆனா நான் வீட்டுல 7 மணிக்கே ஹாஸ்டல் வந்ததா சொல்லிருவேன். என் அம்மா, அப்பா ரொம்ப வெள்ளந்தி. நான் என்ன சொன்னாலும் நம்பிருவாங்க.
ஊருல இருக்கும்போது, சாயங்காலம் 6 மணிக்கு மேல வெளியே போகக் கூடாதுனு சொல்லுவாங்க. ஆனா, நான் 10 மணிக்குத்தான் ஹாஸ்டலுக்கு வருவேன். அதுவும் சென்னை புது இடங்கிறதால ரொம்ப பயப்படுவாங்க. என் அம்மா, அப்பாவ கஷ்டப்படுத்தனும், அவங்கள ஏமாத்தனும் எண்ணமெல்லாம் என் மனசுல கிடையாது.
நான் ஆடிஷன் போறதெல்லாம் சொல்லமாட்டேன். ஆனா கிடைச்சதுக்கு அப்புறம், சும்மா காலேஜ் போயிட்டு இருந்தேன்மா, ஸ்டேஜ்ல பேசுறது பாத்துட்டு அவங்களா கூப்பிட்டாங்க. என் ஃபிரென்ட் ஆடிஷன் போனா. நான் அவக்கூட சும்மா துணைக்கு போனேன். என்னையும் ஆடிஷன் கொடுக்க சொன்னாங்க. செலெக்ட் ஆகிட்டேன். இப்படித்தான் சொல்லுவேன். நான் தேடி அலையிறேனு எதுவுமே சொல்லமாட்டேன் என தெரிவித்தார்.
மேலும், பேசுகையில் எங்கள் வீட்டில் நான்கு பேர் பெண்கள் அம்மாவையும் சேர்த்து இதனால், மாதத்தில் ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருவருக்கு பீரியட்ஸ் ஆகிவிடும். அந்த நேரத்தில், கோவில் திருவிழா பொங்கல், தீபாவளி, சரஸ்வதி பூஜை, திருக்கார்த்திகை போன்ற பங்க்ஷன்கள் வரும்போது ஊர் வழக்கப்படி பீரியட்ஸில் இருப்பவர்கள் சாமி கும்பிடும் பங்க்ஷனில் கலந்து கொள்ள மாட்டார்கள். தனியாக இருப்பார்கள். ஆனால், இதை என்னுடைய அப்பா உடைத்து விட்டார். என்னுடைய பிள்ளைகள் எல்லோரும் சாமி கும்பிட வேண்டும்.
எல்லா பிள்ளைகளும் நல்லா இருக்கணும் என்பதற்காகத் தான் சாமிக்கு படையல் போட்டு, இவ்வளவு விஷயங்களை செய்கிறேன். ஆனால், அவரது உடலில் ஏதோ ஒரு சின்ன பிரச்சனை என்பதற்காக அவளை மட்டும் எப்படி தனியாக விட முடியும் என்று எங்களுடைய அப்பா சாமி கும்பிட கூப்பிடுவார். அதனால், இந்த பழக்கத்தை பழகிவிட்டோம். அது மட்டும் இல்லாமல் பீரியட்ஸ் டைமில் கூட பூஜை ரூமுக்கு கூட செல்வோம். என்னை பொருத்தவரை என்னுடைய குலசாமி அய்யனார் எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும், என்னை ஏற்றுக் கொள்வார்.
என்னை எந்த நேரத்திலும் அவர் ஒதுக்க மாட்டார். நார்மலான நாட்களில் நாங்கள் பூஜை அறைக்க செல்வது போலத்தான் பீரியட்ஸ் நாட்களிலும் சென்று விபூதி குங்குமம் எடுத்துக் கொள்வோம் என்று இதை அந்த வீடியோவை இரண்டு வருடத்திற்கு முன்னால் பிஜே தீபிகா பேசுகின்றார். தற்போது, இந்த வீடியோ வைரலான நிலையில் ஒரு சிலர் இதை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.