தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து, மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், 90ஸ் காலக்கட்டத்தில் காமெடி கலந்த படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பாண்டியராஜன் ரஜினிகாந்த் தன்னிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.
இதனிடையே, ஒருமுறை வெளிநாடு செல்ல விமான நிலையத்திற்கு செல்லும் போது ரஜினி காந்தும் வந்தபோது, அவரை பார்க்க நடிகர் பாண்டியராஜன் அவரோடு பேச கை அசைததாகவும், ஆனால் ரசிகர்களின் கூட்ட நெரிசல்களில் தன்னை கவனிகாமல் சென்ற நிலையில், அதன் பின் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து அழைப்பு வந்து தன்னிடம் மன்னிப்பு கேட்டார் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
தன்னை கண்டுகொள்ளாமல் சென்றதற்கு மனவருந்தி மன்னிக்கவும் என்று கேட்டது தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எனவும், அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஆனால் அவர் எவ்வளவு பெரிய நடிகர் எப்படி ஒரு குணம் இருந்தால் அதை செய்வார் என்று பாண்டியராஜ் மனம் உருகி தெரிவித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.