பாலா இலக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பரதேசி. இந்த திரைப்படத்தில் அதர்வா, வேதிகா உள்ளிட்டோr நடித்திருந்தார்கள். அப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
1930 காலகட்டங்களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம். தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை பற்றி எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்திற்கு 2012 ஆம் ஆண்டுக்கான 60 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது படத்தில் பணிபுரிந்த பூர்ணிமா ராமசாமிக்கு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காஜல் பசுபதி பரதேசி படத்தின் தேயிலை தோட்டத்தில் வேதிகாவை அடிப்பது போல ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் நடித்துக் காட்டிய பாலா வேதிகாவை அடிக்காமல் அங்கிருந்த ஒரு துணை நடிகையை ஓங்கி அடித்தார் .
இப்படித்தான் நடிக்க வேண்டும் என அடித்து வேதிகாவிக்கு காண்பித்தார். அதை பார்த்ததும் எனக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது. பெரிய இயக்குனர் தானே பாலா அவரால் ஹீரோயினை அடிக்க முடியாதா என்ன? அந்த துணை நடிகைக்கு என்ன நடந்தது ?அவரை ஏன் சம்மந்தமில்லாமல் அடிக்க வேண்டும்? அதே அந்த துணை நடிகைக்கு நடந்தது எனக்கு நடந்திருந்தால் நான் நிச்சயம் குரல் கொடுத்திருப்பேன்.
இப்படித்தான் நடிகைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை தாண்டி பிடிப்புகளில் வேலை சம்பந்தமான டார்ச்சர்களும் கொடுமைகளும் நடக்கிறது என காஜல் பசுபதி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் இதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு பட வாய்ப்புகள் இல்லாமலே செய்து விடுகிறார்கள். இப்படி தான் எனக்கு பலமுறை நடந்திருக்கிறது என அவர் வெளிப்படையாக கூறினார்.
0
0