பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பரினீதி சோப்ரா முதலீட்டு வங்கியியல் வேலை பார்க்க விரும்பி லண்டன் சென்று படித்தார். பரினீதி படிப்பை முடித்துவிட்டு 2009ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார். அந்த நேரம் இந்தியாவில் பெரும் பொருளியல் நிலைத் தேக்கம் இருந்தது, எனவே அவர் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தில் பொதுத் தொடர்புகள் ஆலோசகராக சேர்ந்தார்.
பின்னாளில் அந்த நிறுவனம் அவரை கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தது. 2011 ஆம் ஆண்டில் Ladies vs Ricky Bahl எனடர் படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் திரைப்படமே ஹிட் அடித்தது. அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார். இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். இவர் சிறந்த நடிகை என்பதையும் தாண்டி மிகச்சிறந்த பாடகி. பாலிவுட் திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடியிருக்கிறார்.
இவர் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஐ.பி.எல் கிரிக்கெட் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக காணப்பட்டனர். இருவரும் காதலிப்பதை வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டுள்ளனர். இதில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என நெருங்கியவர்கள் மட்டும் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியது.
இந்நிலையில் தற்ப்போது பரினீதி சோப்ரா ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தில் ஒரு சில திரைப்பிரபலங்கள் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த திருமண புகைப்படங்களைக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.