வீரம் படத்தை அடுத்து இந்தியில் ரிமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..- ஹீரோ, ஹீரோயின் இவங்களா?…
Author: Vignesh25 April 2023, 6:30 pm
இயக்குனர் மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். வறட்சிகாலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு தெருக்கூத்து ஆடியிருக்கிறார். அதன் தழுவலாகவே பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார்.

தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளி இயக்குனர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் இப்படத்தை இயக்கினார். முதல் படம் அவருக்கு பல விருதுகளை அள்ளிக்கொடுத்தது. பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 2018ம் ஆண்டு வெளியான இப்படம் ஒடுக்கப்பட்ட இனத்தையும் ஆதிக்க சாதியினரால் அவர்கள் படும் கொடுமைகளை குறித்தும் வெளியானது.

தமிழில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தினை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது.
ஹிந்தி சினிமாவில் முன்னணி இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தான் இந்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறாராம். அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, Siddhant Chaturvedi மற்றும் Tripti Dimri ஆகியோர் தான் இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.