இந்தியன் 2; தலைவலி வந்தால் ஹெட் மசாஜ் 20% தள்ளுபடி; வைரலாகும் அறிவிப்பு

Author: Sudha
15 July 2024, 1:57 pm

கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியானது இந்தியன் 2 திரைப்படம். ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.படத்துக்கு மோசமான விமர்சனங்களே கிடைத்தன. பல திரைப் பிரபலங்களும் தங்கள் கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்தச் சூழலில் கரூரில் இருக்கும் ஒரு அழகு நிலையம் விநோதமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

கரூர் மாவட்டம் தாந்தோணி மலையில் இருக்கும் Studieó 9 Family Saloon And Bridal Studio என்ற அழகு நிலையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இந்தியன் 2 படத்துக்கு சென்று மன அழுத்தம் அதிகரித்தவர்களுக்கு 20 விழுக்காடு தள்ளுபடியில் ஹெட் மசாஜ் செய்யப்படும் என்றும்; அப்படி செய்து கொள்ள வருபவர்கள் இந்தியன் 2 படம் பார்த்ததற்கு ஆதாரமாக டிக்கெட்டை எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விஷயம் சமூக வலைதளங்களில் இப்போது ட்ரெண்டாகியுள்ளது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!