தமன்னா டான்ஸ் போதும்பெரிய ஹீரோ படம் கூட ஓடிரும்; இயக்குனர் சர்ச்சை பேச்சு

Author: Sudha
20 July 2024, 11:25 am

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் டீன்ஸ் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்துள்ளார்.

அவர் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது எக்ஸ் தளத்தில் பிரபலமாகி வருகிறது. அவர் பேசும் போது இப்போதெல்லாம் பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு மெனக்கெட தேவையில்லை. கதை கூட அவசியமில்லை.தமன்னாவை அழைத்து வந்து ஒரு பாடலுக்கு நடனமாடச் செய்தால் போதும் அந்த படம் ஹிட் ஆகி விடுகிறது.

ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் தமன்னா என்று பேசி உள்ளார் சமீபத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடிய திரைப்படம் ஜெயிலர் அதில் தமன்னா நடனமாடிய”வா நூகாவாலயா” பாடல் மிகவும் பிரபலமானது. இதனால் பார்த்திபன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைத் தான் குறிப்பிடுகிறார் என்று இணையத்தில் நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.பார்த்திபனின் இந்தப் பேச்சு இப்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 155

    0

    0