காணாமல் போன நகை.. திடீரென பார்த்திபன் வைத்த ட்விஸ்ட்!

Author: Hariharasudhan
7 November 2024, 6:51 pm

நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிலையில், தனது உதவியாளரிடம் இருந்து நகை கிடைத்தால் நடிகர் பார்த்திபன் புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

சென்னை: நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், அவ்வப்போது இலைமறை காயாக சில வார்த்தைகளைப் பேசி கவர்வது மட்டுமல்லாமல், சர்ச்சைகளிலும் சிக்கி பரபரப்புக்கு உள்ளாவார். இந்த நிலையில், தனது அலுவலகத்தில் இருந்து 12 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாக, நேற்று சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். எனவே, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், பார்த்திபனின் உதவியாளர் ஒருவரிடம் இருந்து நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தான் கொடுத்த புகாரை பார்த்திபன் திரும்பப் பெற்று உள்ளார். இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை என புகார் அளித்து இருந்தார் பார்த்திபன். அதற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

தற்போது, பார்த்திபனின் இயக்கத்தில் டீன்ஸ் படம் வெளியானது. அதேநேரம், பொன்னியின் செல்வன் படத்தில் இறுதியாக பார்த்திபன் நடித்து இருந்தார். மேலும், அவ்வப்போது ஊடக மற்றும் சமூக வலைத்தளப் பேட்டிகளிலும் பார்த்திபன் கலந்து கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க : தேவயானியை காரி துப்பிய சரத்குமார்…படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!