சூப்பர் ஸ்டாரை இயக்கும் பார்த்திபன்; மஹாராஜா கதையா? செம்ம காம்போ,..
Author: Sudha9 July 2024, 10:21 am
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நடிகர் சத்யராஜ் சுருதிஹாசன் போன்றோர் அவருடன் கூலி திரைப்படத்தில் இணைந்து நடிப்பதாக அப்டேட் வந்தது
சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று எல்லா இயக்குனர்களும் விரும்புவார்கள், அதே போன்று சூப்பர் ஸ்டாரும் சில இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புவார்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டாருடன் தானும் இணைந்து பணியாற்ற இருந்ததை தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

சூப்பர் ஸ்டார், பார்த்திபனுடன் இணைந்து பணியாற்ற விரும்பியுள்ளார். தனக்காக ஒரு கதையை தயார் செய்யும் படி பார்த்திபனிடம் கூறியுள்ளார்.
பார்த்திபன் அவருக்காக ஒரு கதையை தயார் செய்துள்ளார் ஆனால் சில தவிர்க்க இயலாத காரணத்தால் அந்த படம் எடுக்க இயலாமல் போய்விட்டது.
சூப்பர் ஸ்டாருக்கு அவர் தயார் செய்த கதையானது இப்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் கதையை போன்றது என பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.