12 வருஷத்தை தொலைச்சிட்டேன்.. அது செட் ஆகல, விவாகரத்து குறித்து பேசிய பார்த்திபன்..!

Author: Vignesh
8 July 2024, 10:24 am

சினிமாவில் ஏதோ படங்கள் எடுக்க வேண்டும் என்று இல்லாமல் வித்தியாசமாக இதுவரை யாரும் முயற்சி செய்யாத விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு பார்த்திபன் படங்களை எடுப்பவர். தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமமான இவர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தார். பின்னர் சில படங்களை இயக்கியும் படங்களில் நடித்தும் இருக்கிறார்.

Parthiban

இந்நிலையில், 1990 ஆம் ஆண்டு சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பார்த்திபனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இது குறித்து சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பார்த்திபன் பேசுகையில், சினிமா பிரபலங்கள் மத்தியில், 2 மாசத்திற்கு ஒரு விவாகரத்து செய்தி வருகிறது.

Parthiban

நான் ஆரம்பத்தில் விவாகரத்து செய்வது தப்பான செயல் என்று நினைத்தேன் ஒரு கட்டத்தில் மனசுக்கு பிடிக்காமல் அவர்களை கஷ்டப்படுத்துவதை விட அவர்களை பிரிந்து சந்தோசமாக வைத்து நாமும் சந்தோஷமாக இருக்கலாமே என்று புரிந்து கொண்டேன். திருமணமான சில மாதங்களிலேயே எனக்கு இந்த திருமணம் செட் ஆகவில்லை என்று உணர்ந்தேன். விவாகரத்து செய்து கொள்ள 12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது முட்டாள்தனம் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 152

    0

    0