அடேங்கப்பா.! எம்ஜிஆர்-ன் கருப்பு கண்ணாடி ரகசியம்…போட்டுடைத்த பார்த்திபன்.!

Author: Selvan
24 February 2025, 6:37 pm

எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம்

தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பார்த்திபன் சில தனியார் சேனலுக்கு தன்னுடைய கடந்த கால சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.

Parthiban interview about MGR

அந்த வகையில் chai with chitra யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகரும் அரசியல்வாதியுமான எம்ஜிஆர் பற்றி பேசியுள்ளார்.அதில் ஒரு நாள் ராமாவரம் தோட்டத்துக்கு இயக்குனருடன் சேர்ந்து நானும் உள்ளே போயிட்டேன்,அப்போ அவருடைய கருப்பு கண்ணாடி வழியாக என்னை பார்க்குறது தெரிஞ்சது,யாரு இவன் தேவையில்லாத ஒரு ஆளு உள்ளே வந்துட்டானோ என்பது போல அந்த பார்வையில் தெரியுது,அப்படி ஒரு ஷார்ப் லுக் அவரு கண்ணுல,உடனே என் கூட வந்த இயக்குனர் அவரு என் அசிஸ்டன்ட் தான் கூறினார்.

இதையும் படியுங்க: விதியை மீறிய கோலி..கண்டுக்காத பாகிஸ்.வீரர்கள்…இந்திய அணிக்கு அடித்த லக்.!

அதன் பிறகு தான் எம்ஜிஆர் கண்ணாடி மீதான சுவாரசியம் தெரிந்தது,அவருக்கு ஒரு ஜோசியர் சொல்லியிருக்காரு,அவருடைய கண்ணு நினைக்குறத வெளிப்படுத்தும் திறன் கொண்டதாம்,அதனால நீங்க கண்ணாடி போட்டு கண்ணை மறைச்சே தீரணும்,நீங்க என்ன நினைக்குறீங்கன்னு அடுத்தவங்களுக்கு தெரிய கூடாது என கூறியுள்ளார்,அதுல இருந்து எம்ஜிஆர் கருப்பு கண்ணாடி போடுவது வழக்கமா கடைபிடித்துள்ளார் என்று அந்த பேட்டியில் பார்த்திபன் தெரிவித்திருப்பார்.

  • samantha in relationship சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?