உன் சங்காத்தமே வேண்டாம்.. தேடிவந்த சீதாவை துரத்தி விட்ட பார்த்திபன்..!
Author: Vignesh5 April 2023, 12:30 pm
90ஸ் களில் பிரபல நடிகையாக தென்னிந்திய திரையுலகில் வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான “ஆண் பாவம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமில்லாமல் சன் டிவி, மெகா டிவி, சூர்யா டிவி என பிரபல தொலைக்காட்சி சேனல் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இப்படி பிரபல நடிகையாக சீதாவும் நடிகர் பார்த்திபனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். அதோடு ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
இந்நிலையில், இருவரும் 2001ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணங்களால் 11 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்து விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன் பிறகு நடிகை சீதா தனது 43 வயதில், 2011ம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் சதிஷை மறுமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களும் சிறுது காலத்தில் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் நடிகை சீதாவின் முதல் கணவரான பார்த்திபன் தனது மனைவியை பற்றி சில விஷயங்களை கூறியிருந்தார். தற்போது, நடிகை சீதா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார்.
அதில் தன்னுடைய மனைவி அதிகம் எதிர்பார்த்ததுதான் எங்களுடைய பிரிவுக்கு காரணம் என்று பார்த்திபன் கூறியதாக நிருபர் சீதாவிடம் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சீதா நான் சிறிய குடுமபத்தில் இருந்து வந்தவள் தான். எனக்கு நடிகை சுஹாசினி ஒரு படத்தில் படுவதை போல “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்” என்று நினைப்பவள்.
தன்னுடன் வாழும் கணவரிடம் இருந்து இந்த எதிர்பார்ப்பு இருப்பதில் என்ன தவறு எனக் கூறினார். மேலும், “சீதா அவருடைய காதலை சொல்லும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் நான் இருந்தேன்” என்று பார்த்திபன் கூறினார்.
ஆனால் அதற்கு சீதா கூறியதாவது “நாங்கள் ஒன்றாக நடித்து கொண்டிருக்கும்போது அவர் தொடர்ந்து போன் செய்து அந்த மூன்று வர்த்தையை மட்டும் சொல் என்று கேட்பார்.
எனக்கும் அவரின் மீது காதல் இருந்ததினால் நான் ஒருநாள் “ஐ லவ் யூ” சொன்னேன். ஆனால் அதனை என்னுடைய அப்பா மற்றொரு போனில் கேட்டு பெரிய பிரச்சனை ஆனது. அப்படிதான் காதல் நிகழ்ந்ததே தவிர பார்த்திபன் சொல்வதை போல இல்லை அவர் பொய் சொல்கிறார்” என்று நடிகை சீதா கூறினார்.
இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், பார்த்திபனை பிரிந்ததற்கான காரணம், குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, என் புருஷன் எனக்காக மட்டுமே என வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது எனக்கு நடக்கவில்லை என்றும், அதனால்தான் அவரை விவாகரத்து செய்தேன் என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இரண்டாவது கணவருடனும் வாழாமல் பிரிந்து தனிமையில் இருக்கும் சீதா, தற்போது கணவர் பார்த்திபனுடன் சேர ஆசைப்படுகின்றாராம். இதனை பார்த்திபனிடமே வெளிப்படையாகவும் கூறியும் உள்ளார்.
ஆனால், பார்த்திபன் பிரிந்தது பிரிந்ததுதான் இனி சேர்ந்து வாழ்வதற்கு ஒன்றும் இல்லை என்றும் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளாராம்.
இதனால் மன வருத்தத்தில் இருந்த சீதா, தற்போது வீட்டு தோட்டத்தினை பராமரித்துக் கொண்டு அதில் நேரம் செலவிட்டு வருகிறாராம், பார்த்திபன் சம்மதம் தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பிலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பு பார்த்திபனிடம் இருந்த எதிர்பார்ப்பு திருமணத்திற்கு பின்பு இல்லாமல் போனதாலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் சீதா தெரிவித்துள்ளார். மேலும், பார்த்திபன் மனைவியை மதிக்கவும் இல்லை… மனைவிக்கு என்று மரியாதை ஒன்று கொடுத்தால் குடும்பத்தில் பிரிவு இருக்காது என்று சீதா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.