“நாய்குட்டிய Control பண்ணமுடியல…” பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதாவின் Video…!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2022, 12:10 pm

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன். கடந்த வருடத்தில், இவர் இயக்கிய நடித்த ஒத்த செருப்பு படம் மக்கள் மனதை வென்று ஹிட் அடித்தது.

புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்த்திபன். அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது கல்யாணத்தில் நல்லபடியாக முடிந்தது.

இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர்கள் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட பல்வேறு காரணங்களுக்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆகி பிரிந்து விட்டார்கள்.

அதன்பிறகு சீதா, ரமேஷ் என்னும் சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் பார்த்திபன் திருமணம் செய்யாமல் இரண்டு பெண் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கொஞ்சம் காலமாக சீரியல்களில் தலை காட்டி வந்த சீதா, walking போகும்போது தெருவில் வாழும் நாய்க்குட்டியோடு விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி