இது கதைக்கு செட்டாகாது.. பிரபல நடிகையை துரத்திவிட்ட பார்த்திபன்..!

Author: Vignesh
6 April 2024, 1:47 pm

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க கமிட்டாகி, அந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் தனக்கு பக்கபலமாக இருந்த விக்னேஷ் சிவனை காதலித்து அதன்பின் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருவரும் இருந்து வந்தனர்.

மேலும் படிக்க: என்னடா பொசுக்குன்னு முடிச்சுட்டாங்க.. அதிரடியாக முடிவுக்கு வரும் Vijay TV ஃபேவரட் தொடர்..!

vignesh-shivan---nayanthara---updatenews360

இவர்கள் இருவரும் சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு திருமணம் செய்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை நயன்தாராவை “குடைக்குள் மழை” என்ற படத்தில் நடிக்க வரும் படி இயக்குநர் பார்த்திபன் அழைத்து உள்ளார். ஆனால் நயன் அவர் கூறிய நேரத்திற்கு வராமல் அடுத்த நாள் போன் செய்து, “பேருந்து இல்லாததால் தான் இன்றைய தினம் வரவில்லை. நாளைக்கு வாருவதாக ” எனக் தெரிவித்து உள்ளார் நயன்.

kudaikul mazhai-updatenews360

மேலும் படிக்க: 2-வது திருமணம்?.. பிரபல நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் லோகேஷ்.. பகீர் கிளப்பும் பயில்வான்..!(Video)

இதனால், கோபமடைந்த பார்த்திபன்,“ இனி ஏன்னுடைய படத்தில் நீங்க நடிக்க வேண்டாம்” என தெரிவித்து விட்டு காலை கட் செய்து உள்ளார். இதற்காக நயன்தாரா, “நானும் ரெவுடி தான்” திரைபடத்தில் வில்லனாக நடித்த பார்த்திபனை கெத்து காட்டி கொலை செய்வது போல் உள்ள சீனில் அவரை கத்தியால் குத்தியபடி நடித்து பலிக்கு பழி வாங்கி உள்ளாதாக பார்த்திபன் ஒரு விழாவில் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

nanum rowdy than-updatenews360

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “நயனுக்கு இப்படி ஒரு மறுப்பக்கம் இருக்கா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

  • Vijay TV celebrity diagnosed with rare disease… Slim body photo goes viral விஜய் டிவி பிரபலத்துக்கு அரிய வகை நோய்… உடல் மெலிந்த போடோ வைரல் : நடிகை கண்ணீர்!