அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.
பருத்திவீரன் படத்தில் குட்டி பிரியாமணியாக நடித்தவர் கார்த்திகா தேவி. அதன்பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அண்மையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாகவும், தங்கள் ஊரில் சிலர் படத்தில் நடிப்பார்கள் என்றும், அவர்கள் மூலமாக தான் தனக்கு பருத்திவீரன் படத்தின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பள்ளியில் வைத்து என்னை உட்பட என் வயது போன்ற சிறுமிகளை போட்டோ எடுத்தார்கள். அதில் என்னை தேர்வு செய்தார்கள். அறியாத வயசு பாடல் சின்ன வயது முத்தழகுக்காக எடுக்கப்பட்டது. எனக்காக இளையராஜா சார் பாடல் பாடியிருப்பார் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அப்போது எனக்கு அது ஒன்றும் தெரியலை, தான் தேர்வானது தன் அப்பாவுக்கே தெரியாது. அப்பாவுக்கு தெரிந்தால் விடமாட்டார் என்பதால் அவரிடம் கூறவில்லை. சொல்லாமல் கூட வந்துட்ட என்று கோபப்பட்டார். ஆனாலும், அவருக்கு தான் நடிப்பது பெருமை தானே என்று ஏற்றுக் கொண்டார்.
பணமில்லாத காரணத்தால் வீட்டு பக்கத்தில் உள்ள சிலிண்டர் கம்பெனியில் ஐந்தாண்டுகள் வேலை பார்த்தோம். அப்பா உடல்நிலை சரியில்லாததால் இறந்துவிட்டார். அதன் பிறகு அத்தை வந்து அவருடைய மகனுக்கு தன்னை திருமணம் செய்து வைத்தார். தானும் அக்காவும் ஒரே வீட்டில் தான் திருமணம் செய்து வாழ்கிறோம்.
ஆடு மாடு மேய்ப்பதை என் கணவர் பார்த்துக்கொள்வார். கடை ஒன்றை வைத்து உள்ளோம். அதைத்தான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விஜய் டிவியில் சீரியலுக்கு வந்து கேட்டார்கள். சென்னை போக வேண்டும் என்பதற்காக என்னால் அதில் நடிக்க முடியவில்லை.
நானும் என் குடும்பமும் கஷ்டத்தில் இருந்த போது பருத்திவீரன் படத்திற்கு நடிக்க அழைத்து சென்றவர்களிடம் நிலையை சொல்லி உதவி கேட்டோம். ஆனால், யாரும் அப்போது கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
This website uses cookies.