பருத்திவீரன் படத்துல இதை ரெண்டு மூணு தடவை பண்ணோம்.. அந்த சீன் எல்லாம் உண்மை தான் :பிரியா மணி ஓபன் டாக்..!
Author: Vignesh13 February 2023, 6:30 pm
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.
சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இவர் நடித்த FAMILYMAN 2 Web Series விமர்சனங்கள் அப்படி இப்படி இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருக்கிறது.
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அசுரன் பட ரீமேக், இவருக்கு சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள். இதை தொடர்ந்து அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்திலும் நடித்து வருகிறாராம், மேலும் சில பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.
தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் சுட சுட கவர்ச்சியாக Structure காட்டி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியாமணி.
தற்போது பருத்திவீரன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை பிரியாமணி தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, பருத்திவீரன் படம் குறித்த சுவாரசியமான தருணங்களை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது, ஊரோரம் புளியமரம் பாடலுக்கு பிறகு, கார்த்தி தன்னை அடிப்பது போன்ற சீன் வைக்கப்பட்டிருக்கும் என்றும், அந்த காட்சியில், கார்த்தி அடித்ததும் சேரும் சகதியும் நிறைந்த ஒரு குழியில் தான் விழுந்ததாகவும், அது உண்மையிலேயே, ஷூட்டிங்குக்கு 4, 5 நாட்களுக்கு முன்பு தோண்டப்பட்டது குழி என தெரிவித்துள்ளார்.
அந்த குழிக்குள் சேறு சகதியோடு வேறு எது வெல்லோமோ கலக்கப்பட்டது எனவும், அந்த சீனை மட்டும் 3,4 தடவை எடுத்ததாகவும், உடல் முழுவதும் சகதியுடன் தான் அந்த காட்சியில் நடித்து கொடுத்ததாகவும், அந்தக் காட்சியை இன்னும் தன்னால் மறக்கவே முடியாது என பிரியாமணி உருக்கத்துடன் கூறியுள்ளார்.