சூப்பர் ஸ்டார் எல்லாம் எதுக்கு.. ரெம்ப வேஸ்ட்: யாருக்கும் எந்த பயனும் இல்ல… பிரபல நடிகை தடாலடி!

Author: Vignesh
20 December 2023, 3:28 pm

பொதுவாக திரையுலகில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்களை சூப்பர் ஸ்டார் என்பார்கள். அந்த வகையில், தமிழில் ரஜினிகாந்த், ஹிந்தியில் ஷாருக்கான், மலையாளத்தில் மம்முட்டி ஆகியோரை சொல்லலாம்.

இந்நிலையில், அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பார்வதி. இவர் தொடர்ந்து, பல படங்களின் நடித்து வருகிறார். இவர் தமிழில் பூ படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், மரியான், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

parvathy

இந்நிலையில், பார்வதியிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், சூப்பர் ஸ்டார் யாருக்கும் எதுவும் தராது சூப்பர் ஸ்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால், யாருக்காவது பயன் ஏற்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் என்றால் இமேஜஸ் இல்லை ஒருவரது செல்வாக்கு இல்லை ரசிகத்தனம் முற்றி பைத்தியமாகிறவர்கள் வைக்கிற பெயர் எதுவென்று எனக்கு தெரியவில்லை.

parvathy

சூப்பர் ஆக்டர் என்றால் எனக்கு மகிழ்ச்சி ஸ்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற கூறியுள்ளார். மேலும், மலையாளத்தில் மூன்று சூப்பர் ஸ்டார் ஆக்டர் பகத் பசில், ஆஷிப், மற்றும் ரீமா என்றார்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!