“பத்து தல” படத்தை பார்த்த சிம்புவுக்கு ஹார்ட் அட்டாக் …. பதற்றத்தில் பக்கா குஷியான ரசிகர்கள்!

Author: Shree
28 March 2023, 10:50 am

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் நாயகன், பெண்களின் மன்மத மன்னன், சின்ன தல என ரசிகர்கள் புகழ் பாடுபவர் நடிகர் சிம்பு. இவர் லிட்டில் சூப்பர் ஸ்டாரில் துவங்கி யங் சூப்பர் ஸ்டார், ஆத்மன் எஸ்டிஆர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

தனது தந்தை டி.ராஜேந்தர் மூலம் கைக்குழந்தையாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சிம்பு குழந்தை பருவத்திலே நடிப்பில் பின்னி பெடலெடுத்தார். “என் தங்கை கல்யாணி” படம் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட சிலம்பரசன் பதினெட்டு வயதில் “காதல் அழிவதில்லை” படம் மூலம் நாயகனாக பதவி உயர்வு பெற்றார்.

அதன் பின்னர் கோவில், மன்மதன், வல்லவன், விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் ,,செக்கச் சிவந்த வானம், மாநாடு, வெந்து தணிந்தது காடு இப்படி தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தை பார்த்த சிம்புவுக்கு நெஞ்சு அடைக்காத குறைதானாம். அவ்வளவு சந்தோஷமாகிவிட்டாராம். படம் சூப்பரா வந்திருப்பதாக கூறி படக்குழுவினருக்கு நன்றி கூறியனாராம். இந்த படம் நிச்சயம் சிம்புவின் மார்க்கெட்டை உயரத்தில் தூக்கி நிறுத்தும் என்பதால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது.

குறிப்பாக ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்கிற படக்குழு. இதை கேட்டதும் ரசிகர்கள் ஹேப்பி மூடில் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் ரசிகர்கள் ஒருவர், 30ஆ தேதி ரோகினி பக்கம் போயிடாதீங்க .. தலைவனுக்காக கூடற கூட்டத்த பாத்து ஹார்ட் அட்டாக் வந்துரும்ம்ம்….என மிரட்டியுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1075

    22

    7