சிம்புவுக்கு என்னதான் ஆச்சு? அப்போ அந்தபடம் அவ்வளவுதானா??… சத்திய சோதனை..!
Author: Vignesh18 February 2023, 8:45 pm
சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் பத்து தல படம் ரிலிஸுக்கு ரெடியாகி உள்ளதாக கூறப்படுகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிய சூப்பர் ஹிட் அடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிம்பு கேங்ஸ்டர் கதைகளத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. திரையரங்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், சிம்பு கெரியரில் மிக முக்கியமான படத்தை கொடுத்தவர் கௌதம் மேனன் என்று சொல்லலாம். சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் கடைசியாக வந்த வெந்து தனிந்தது காடு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால், யார் கண் பட்டதோ சிம்பு இனி கௌதம் பக்கம் தலை வைத்து கூட படக்க கூடாது என முடிவெடுத்து விட்டாராம். அதாவது இருவருக்கும் இடையே தற்போது மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம். ஆதலால் இனி கௌதம் மேனன் திரைப்படங்களில் தான் நடிக்கப்போவதில்லை என்று சிம்பு முடிவெடுத்துள்ளாராம். இவ்வாறு ஒரு தகவல் தற்போது வெளிவருகிறது.
இதுஒருபுறம் இருக்க, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் என். கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் சிம்பு நடித்துள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள பத்து தல படம் கடந்த நவம்பர் மாதம் முழு ஷூட்டிங் முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பத்து தல படத்தில் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில், சிம்பு படத்தின் ஷூட்டிங்கை முடித்த அடுத்த நாளே பாங்காக் சென்றுவிட்டாராம். தன்னுடைய அடுத்த படத்திற்காக தயாராகவும் ஓய்விற்காகவும் அங்கு சென்று சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுகொண்டும் உள்ளாராம்.
இதனிடையே, பத்து தல படம் மார்ச் மாதம் வெளியிட படக்குழு முடிவெடுத்திருந்த நிலையில் படத்தின் டப்பிங் இன்னும் நிறைவடையாமல், இருப்பதால், அதற்காக சிம்புவை இயக்குனரும் தயாரிப்பாளரும் இங்கே வர அழைத்து இருக்கிறார்கள்.
ஆனால் சிம்பு நீங்கள் இங்கே வாருங்கள் தன்னால் இப்போதைக்கு அங்கே வரமுடியாது என்றும் பாங்காக்கில் இருந்து டப்பிங் கொடுத்து முடிக்கிறேன் என்று ஆணவத்துடன் பதிலளித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதனை பல சினிமா விமர்சகர்கள் விமர்சித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.