“Fevicol போட்டு ஒட்டிடுவேன்னு அஜித் சார் மிரட்டுவார்”.. ‘துணிவு’ படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த பிரபலம்..!

Author: Vignesh
13 January 2023, 10:05 am

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை உள்ளிட்ட 2 திரைப்படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் H.வினோத் – அஜித் குமார் கூட்டணியில் உருவாக்கப்பட்ட 3ஆவது திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜான் கோக்கென், பவானி ரெட்டி, ஜி பி முத்து போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ThunivuAjith_updatenews360

இப்படத்தில் அஜித்தின் ஸ்டைலும், கெட்டப்பும் செம மாஸாக உள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்கஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

thunivu---updatenews360

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தியதாக படத்தினை பார்த்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் துணிவு படத்தில் அமீர் மற்றும் பாவ்னி ஜோடிகள் நடித்துள்ளனர்.

pavni amir-updatenews360

துணிவு படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தையும் தங்களின் காதல் மேட்டர் தெரிந்து அஜித் என்ன தெரிவித்தார் என்பதையும் ஓப்பனாக கூறியுள்ளனர். அமீர் அஜித், அருகில் அமரவேண்டும் என்பதால் அசையாமல் அப்படியே இருப்பாராம்.

அதேபோல் அஜித் வரும் போது யாரும் எந்திரிக்கக்கூடாது என்றும் மீறினால் Fevicol போட்டு ஒட்டிவிடுவேன் என்றும் மிரட்டுவாராம்.

amir pavni - updatenews36y0

அதேபோல் அமீர் – பாவ்னி காதல் மேட்டர் தெரிந்ததும் அவர்களை அழைத்து வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பதையும் என்ன செய்யக்கூடாது என்பதையும் விளக்கி எப்படி வாழ்க்கையை கொண்டு போகவேண்டும் என்பதையும் அறிவுரையாக கூறுவார் என அமீர் பாவ்னி ஜோடி தெரிவித்துள்ளனர்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!