இருட்டு நேரத்துல இங்க என்ன பண்றீங்க… காதல் ஜோடியை கதம் கதம் செய்த ரசிகர்கள்!

Author:
9 November 2024, 9:59 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பாவினி. மாடல் அழகியான இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

ameer pavini

இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸில் அமீர் இவரை ஒரு மனதாக உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் அமீரின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டு அவருக்கு ஓகே சொல்லி காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதற்கு ஓகே சொன்னதே பாவினியின் அம்மா தானாம். ஒரே பிளாட்டில் ஒன்றாக இருங்கள் என அட்வைஸ் கொடுத்தாராம். மேலும், இவர்களுடன் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக பாவனி கூறியிருந்தார்.

ameer-pavini

திருமணம் எப்போது என்று தான் பேட்டிகளில் இருவரிடமும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், ஏதாவது பதில் சொல்லி இருவரும் கேள்விகளை சமாளித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவலை என்னவென்றால் நடிகை பாவினி ரெட்டி இன்று தனது பிறந்த நாளை கொண்டாட அவருக்கு அவரது காதலன் அமீர் செம சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என நினைத்து இரவு 12 மணிக்கு அவரை பீச்சுக்கு அழைத்துச் சென்று பீச்சில் குதூகலமாக இருவரும் சேர்ந்து ரொமான்டிக் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. என்னதான் பிறந்த நாளாக இருந்தாலும் ஆளே இல்லாத இடத்தில் இருட்டு நேரத்தில் இப்படியாக கூத்தாடுவது என பலரும் அமீர் மற்றும் பாவினியை விமர்சித்து வருகிறார்கள்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 103

    0

    0