என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.
திரைப்பட நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து உள்ளது. அதற்கான முக்கிய காரணம், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வரும் மலராக நடிக்கும் பவித்ரா ஜனனிக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
சென்னை பெண்ணான இவர், கல்லூரி காலத்தில் நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் தான் ஆபிஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது புடவை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். “என்ன Weight-னு தூக்கி பார்த்துட்டு சொல்லவா ?…” என்று இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.