60 வயது நடிகருடன் காதலா…பண வெறியில் மனைவி…பிரபல நடிகையின் முதல் கணவர் ஓபன் டாக்..!

Author: Selvan
5 February 2025, 2:06 pm

60 வயதில் உல்லாசத்தை தேடும் பிரபல தெலுங்கு நடிகர்

சினிமா உலகில் அன்றுதொட்டு இன்று வரை பல பிரபலங்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர்.சிலர் அடுத்த திருமணத்திற்கு ரெடி ஆகி மகிழ்ச்சியாக வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.

இதையும் படியுங்க: ‘கோட்’ சாதனையை துவம்சம் செய்த அஜித்…டாப் கியரில் விடாமுயற்சி..!

அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணனான நரேஷ் பாபு கிட்டத்தட்ட 3 திருமணம் செய்து,பின்பு அனைவரிடம் விவாகரத்து பெற்று தன்னுடைய 60 வயதில் பிரபல நடிகை பவித்ரா லோகேஷை காதலித்து 4-வது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

Naresh Babu fourth marriage

இவர் ஏற்கனவே டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீனுவின் மகளை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார்,இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்,அடுத்ததாக ரேகா சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து பின்பு அவரையும் விவாகரத்து செய்தார்,இவர்களுக்கும் ஒரு மகன் உள்ளார்,தொடர்ந்து 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்து மூன்று வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில்,நடிகை பவித்ராவை காதலித்து கடந்த 2023 ஆம் ஆண்டு 4-வது திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் ‘மல்லி பெல்லி’ என்ற படத்தின் ஒன்றாக நடித்தது மூலம் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர்.நடிகை பவித்ரா லோகேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தாலும்,நரேஷ் பாபவுவை இரண்டாவது திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

pavithra lokesh first husband

இந்த நிலையில் பவித்ரா லோகேஷின் முதல் கணவரான சுரேந்திர பிரசாத் பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.அதாவது என்னுடைய “முதல் மனைவி மிகவும் ஆடம்பர வாழ்க்கையை விரும்ப கூடியவர்,அவர் காசுக்காக என்ன வேணாலும் செய்வார்,அதனால் தான் நரேஷ் பாபவுவை திருமணம் செய்துள்ளார்,அவருக்கு 1500 கோடிக்கு மேல சொத்து இருப்பது தெரிந்து தான் அவருடைய வயதை பார்க்காமல் திருமணம் செய்துள்ளார்”என்று கூறியுள்ளார்.

  • Rashmika Mandanna ராஷ்மிகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசுக்கு சமூக அமைப்பு பரபரப்பு கடிதம்!