1500 கோடி சொத்துக்காக 4-வது பொண்டாட்டியா போயிட்டா.. பவித்ராவின் முதல் கணவர் காட்டம்..!

Author: Vignesh
28 March 2024, 6:39 pm

சென்னை தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா-. இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

pavitra-lokesh

இந்த நிலையில் தெலுங்கு நடிகருமும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். நரேஷும் 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆனவர். 3வதாக ரம்யா ரகுபதி என்பவரை மணந்து அவரையும் சமீபத்தில் விவாகரத்து செய்து உள்ளார்.

pavitra-lokesh

இந்த நிலையில் நரேஷும், பவித்ராவும் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த போது, 3வது மனைவியான ரம்யா ரகுபதி அங்கு சென்று அவர்கள் இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார். அப்போது, போலீசார் குறுக்கிட்டு, அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது அனைவரும் அறிந்த விஷயம்.

pavitra-lokesh

இந்த நிலையில், திருமணம் முடிந்து சில நாட்களில் இருவரும் துபாயுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து வந்தனர். தற்போது, திருமணத்திற்கு பின்பும் நடிகை பவித்ரா படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

pavitra-lokesh

இந்நிலையில், சமீபத்தில் நடிகை பவித்ராவின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் ஒரு தகவலை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது, நடிகை பவித்ரா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர் என்பதால் அதற்காக எதையும் செய்து விடுவார். அப்படி மிகப்பெரிய பிளானை போட்ட பவித்ரா நரேஷ் பாவுவின் 1500 கோடி சொத்தை அபகரிக்க தான் அவரை கல்யாணம் செய்திருக்கிறார். பணத்திற்காக என்னை விவாகரத்து செய்த பவித்ராவை நரேஷ் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றாவது நிச்சயம் ஒருநாள் அது தெரியவரும் என்று கோபத்துடன் பகிர்ந்து உள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 454

    0

    0