கர்ப்பமாக இருக்கும் பாவ்னி ரெட்டி?.. வைரலாகும் அமீர் வெளியிட்ட வீடியோ..!
Author: Vignesh19 July 2023, 3:30 pm
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாவனி ரெட்டி. அவர் விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார்.
அது ஷோ பார்ப்பவர்கள் எல்லோரையுமே கலக்கமடைய வைத்தது. அதற்கு பிறகு அதே ஷோவில் வைல்டு கார்டு என்டிரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் என்பவர் பாவனியிடம் தனது காதலை சொன்னார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதன்பின் பாவனியிடம் பிக் பாஸ் ஜோடிகள் 2 சீசனில் தன் காதலை வெளிப்படுத்தினார் அமீர். அதிலிருந்து இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றி வந்தனர். இதனிடையே, தோல்பட்டை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார் பாவனி.
இதனிடையே, சில மாதங்களுக்கு முன் பாவினி ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேள்வி இருந்துள்ளது. அதை படித்த பாவனிடம் அமீர் ஆம் என்று கூறியுள்ளார். உடனே ஷாக்கான பாவினி இது இப்போது இல்லை ஐந்து வருடத்திற்கு பின் தானே கல்யாணம் பண்ணிக்க போறோம் என்று பாவனி தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிஷன்கள் ஏற்கனவே 35 வயசாச்சு இன்னும் அஞ்சு வருஷம் அப்படின்னா, 60 வயசு பின் கர்ப்பமாக போறீங்களா நின்று கலாய்த்து வருகின்றனர்.