மீண்டும் திருமண வாழ்க்கையில் நுழைய விரும்புகிறேன்.. பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ஓபன் டாக்..!

Author: Vignesh
8 June 2024, 2:48 pm

பொதுவாக சினிமா பிரபலங்கள் என்றாலே காதலிப்பது திருமணம் செய்வது பின்னர் விவாகரத்து பெறுவது என்பது வழக்கமான ஒரு நிகழ்வாகவே தற்போது மாறிவிட்டது. அப்படி ரீல் ஜோடியாக நடித்து ரியல் ஜோடியாக மாறியவர்களில் ஒரு ஜோடி தான் பவன்கல்யாண் மற்றும் ரேணு தேசாய் திருமணத்துக்கு முன்பே இவர்களுக்கு மகன் பிறந்த நிலையில், திருமணத்திற்கு பின் ஆத்யா என்ற பெண் குழந்தை பிறந்த இரு ஆண்டுகளில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். பவன் கல்யாண் மூன்றாம் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

pawan kalyan ex wife renu

ரேணு இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி நிச்சயதார்த்தமும் செய்து கொண்ட ஆனால், திடீரென நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு தனியாக வாழ்வதென முடிவெடுத்தார். ஆனால், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வரும் நடிகை ரேணு இரு குழந்தைகளின் படிப்பு வளர்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

pawan kalyan ex wife renu

மேலும் படிக்க: ரூ.80 கோடி சொத்துக்களை கோவிலுக்கு கொடுத்துட்டாங்க.. சாமியார் ஆன முன்னணி நடிகை.. யாரு காரணம் தெரியுமா?..

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், இரண்டாம் திருமணம் செய்து கொள்ள தற்போது தயாராக இருப்பதாகவும் கண்டிப்பாக இரண்டாம் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், என் குழந்தைகளுக்கு ஒரு பராமரிப்பாளர் தேவைப்பட்டது. அவர்களுக்கு உதவி தேவை திருமணம் செய்து கொண்டால் கணவருடன் நேரத்தை செலவிட வேண்டி இருக்கும்.

pawan kalyan ex wife renu

மேலும் படிக்க: அரிய வகை நோய்.. வீட்ல பகத் பாசில் பண்றதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு.. நஸ்ரியா ஷாக்கிங் தகவல்..!

இந்த செயலால் இரு குழந்தைகள் தனியாக இருக்கும் சூழல் உருவாகும் என்பதாலும், தந்தை இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு நானும் இல்லை என்றால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு திருமணத்தை ஒதுக்கி வைத்திருந்தேன். இரண்டாவது மூன்று ஆண்டுகளில் குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள். குழந்தைக்கள் கல்லூரிக்கு சென்று விடுவார்கள்.

pawan kalyan ex wife renu

அப்போது, எனக்கு நண்பர்கள், காதலர் என்று ஒரு புதிய உலகம் கிடைக்கும் நான் சுதந்திரமாக இருப்பேன். திருமணத்தை என்னால் அப்போது அனுபவிக்க முடியும். அதனால், தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறேன். கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வேன் எனக்கு திருமண வாழ்க்கை வேண்டும் எல்லா தாம்பத்திய வாழ்க்கையும் அனுபவிக்க விரும்புகிறேன் என்று ரேணுதேசாய் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 479

    0

    0