திரையும் ‘தீ’ பிடிக்கும்.. திரையரங்கிற்குள் தீயிட்டு கொண்டாடிய பவர் ஸ்டார் ரசிகர்கள்..!
Author: Vignesh9 February 2024, 8:36 pm
பழைய திரைப்படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து தியேட்டர்களில் கொண்டாடும் கலாச்சாரம் தமிழ்நாடு போலவே ஆந்திரா ரசிகர்கள் மத்தியிலும் பாப்புலராகி வருகிறது. அந்த வகையில், ஆந்திராவில் இன்று பவர்ஸ்டார் பவன் கல்யாணின் கேமராமேன் கங்காதோ ராமபாபு என்ற படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது.
அந்த படம் ரிலீஸ் ஆனதை கொண்டாடிய ரசிகர்கள் ஒரு கட்டத்தில் தியேட்டர் உள்ளே பேப்பர்களை கொளுத்தி தீ வைத்து விட்டனர். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரனாகி வருகிறது.
Rerun of #Malegaon (#Maharasthra) theatre #fire cracker bursting by fans when #Jawan was screened. Insane Fans ignite papers in #Nandyala theater during Pawan Kalyan's 'Cameraman Ganga to Rambabu' re-release in #AndhraPradesh.
— Sneha Mordani (@snehamordani) February 9, 2024
Safety can go take a walk! 😡 pic.twitter.com/kCOuLbJdNL
முன்னதாக, தெறி படத்தை மட்டும் தெலுங்கில் ரீமேக் செய்தால் என் சாவுக்கு காரணம் நீங்கள் தான் என இயக்குநர் ஹரிஷ் ஷங்கருக்கு பவன் கல்யாணின் ரசிகை கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.