‘இந்தி’ திணிப்பை எதிர்க்கிறேன்…பல்டி அடித்த பவன் கல்யாண்.!

Author: Selvan
16 March 2025, 11:11 am

இந்தி திணிப்பை எதிர்க்கிறேன்

தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகரும்,ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் தற்போது “இந்தி திணிப்பை நானும் எதிர்க்கிறேன்” என அவர்விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்க: தனுசுக்கு கதை ரெடி…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சுவாரசிய அப்டேட்.!

பொதுக் கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண்”தமிழ் திரைப்படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வருவதால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அதை அனுமதிக்கின்றனர்.

ஆனால் அவர்கள் இந்திய மொழியை ஏன் எதிர்க்கிறார்கள்?இந்தி திரைப்படங்களில் இருந்து வரும் வருவாயை அவர்கள் விரும்புகிறார்கள்,ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள்,இது எந்த அளவிற்கு நியாயமானது?” என கேள்வி எழுப்பினார்.

இந்த கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில்,நடிகர் பிரகாஷ் ராஜ்,”இந்தி திணிப்பை எதிர்ப்பது இந்தி மொழியை வெறுப்பதாக பொருளாகாது” என தனது கருத்தை பதிவிட்டார்.

பவன் கல்யாணின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,அவர் தனது X பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதும், அதையே கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் இந்தியாவின் கலாசார ஒருங்கிணைப்பை பாதிக்கும். நான் ஒருபோதும் இந்தி மொழியை எதிர்க்கவில்லை.ஆனால் இந்தி கட்டாயமாக்கப்படுவதை நிச்சயமாக எதிர்க்கிறேன்.”என்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், “பல மொழிக் கொள்கையானது மாணவர்களுக்கு தேர்வுச் சுதந்திரம் அளிக்கவும்,இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.எனவே, எந்தவொரு மொழிக்கும் எதிராக அல்லது எந்த ஒரு மொழியை கட்டாயமாக்கும் விதமாக இந்தக் கொள்கையை புரிந்துகொள்ள வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

  • actress sona shared about issue between vadivelu and her வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்