9 காதல்.. 3 திருமணம்.. அடிக்கடி காதலில் விழுந்த பவன் கல்யாண் குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

Author: Vignesh
10 June 2024, 1:09 pm

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராகவும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று கொண்டாடப்பட்டு வருபவருமான நடிகர் பவன் கல்யாண் மூன்றாம் திருமணம் குறித்து தற்போது, இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் ஜன சேனா கட்சியின் தலைவராக வெற்றி பெற்று கொண்டாடிய தன் கணவரை மூன்றாவது மனைவி அன்னா லேஷ்னேவா வரவேற்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

pawan kalyan

மேலும் படிக்க: ஷகிலா கூறிய அந்த வார்த்தை.. அவசர அவசரமாக நிச்சயதார்த்தத்தை முடித்த பயில்வான்..!

ஏற்கனவே, விவாகரத்து பெற்ற அன்னா லேஷ்னேவாவுக்கு, பொலேனா அஞ்சனா பாவைனாவா என்ற மகள் இருக்கிறார். பவன் கல்யாண் தன் மூன்று குழந்தைகளையும் சேர்த்து அன்னா லேஷ்னேவாவின் மகளையும் வளர்த்து வருகிறார். இரு ஆண்டுகள் அன்னா லேஷ்னேவாவை டேட்டிங் செய்து 2013 இல் தான் இவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2017 மார்க் சங்கர் பவோனோவிச் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

ரஷ்ய மாடல் நடிகையான அன்னா லேஷ்னேவா 2011 தீன் மா என்ற படத்தின் ஷூட்டிங் சந்தித்து பழகி இருக்கிறார். அதன்பின், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 1997 நந்தினியை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். அதன் பின்னர், 2008 ரேணு தேசாய்யை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்றனர். இரண்டு குழந்தைகளுடன் ரேணு தேசாய் 12 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

pawan kalyan ex wife renu

மேலும் படிக்க: அடேங்கப்பா.. சொந்த பணத்தில் வீடு கட்டி கொடுக்கும் விஜய்.. அடுத்த மாவட்டம் கோயம்புத்தூர் தானாம்..!

குழந்தைகளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்த பின்னர் இரண்டு மூன்று ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வேன். எனக்கும் திருமண வாழ்க்கையில் எல்லா தாம்பத்திய வாழ்க்கையும் அனுபவிக்க விரும்புவதாக நடிகை ரேணு தேசாய் வெளிப்படையாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். முன்னதாக, பவன் கல்யாண் 9 பேரை காதலித்து மூன்று பேரை திருமணம் செய்து இரண்டு பேரை விவாகரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 390

    0

    0