மயில்போல பொண்ணு ஒன்னு… இதயங்களில் ஊடுருவிய இனிமையான பாடல் மீண்டும் மக்கள் ரசனையில்!
Author: Rajesh26 January 2024, 1:02 pm
தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா கடந்த 24ம் தேதி கொழும்பை வந்தடைந்தார். இதனிடையே, பவதாரணிக்கு நேற்று முன்தினம் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பவதாரணி கொழும்பு லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே உயிரிழப்புக்கான காரணம் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரின் மறைவு செய்தி செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நேரத்தில் அவர் பாடிய பாடல்களை மக்கள் மீண்டும் கேட்கத்துவங்கியுள்ளனர். குறிப்பாக அவர் பாடிய “மயில்போல பொண்ணு ஒன்னு” பாடல் இன்று வரை பலரின் பேவரைட் பாடலாக உள்ளது. அந்த இந்த இமையான குரலை மீண்டும் மீண்டும் கேட்டு பவதாரணியின் இழப்பை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கின்றனர் ரசிகர்கள். அந்த பாடலுக்காக அவர் தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.