விஜய் இல்லன்னா சாப்பாடே இல்ல… கட்சிக்காரர்களை காறித்துப்பும் பாதிக்கப்பட்ட மக்கள்!

Author: Rajesh
8 December 2023, 6:01 pm

மிக்ஸாம் புயல் காரணமாக வெள்ளத்தில் சிக்கி சென்னையில் பல முக்கிய பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தது. சாலை ,வீடுகள் , வீதிகள் எங்கும் வெள்ளநீர் தேம்பி மக்கள் அபாயகரமான நிலையில் உயிர் தப்பினர். சிலர் வெள்ளத்தில் இருந்து மீள முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாலையெங்கும் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் படகு, ஜேசிபி, டிராக்டர் என பலவற்றில் சென்று பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துதனர். அரசு மட்டுமின்றி தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நலஉதவிகளையும் செய்துள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கத்தால் பலனடைந்த மக்கள் அவருக்கு நன்றிகள் கூறி மனதார வாழ்த்திய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆபத்தான கட்டத்தில் இருந்து எங்களை மீட்டெடுத்தவர் விஜய் தான். விஜய் இல்லை என்றால் எங்களுக்கு சாப்பாடே இல்லை. கட்சிக்காரர்கள் யாரும் வந்து எங்களை பார்க்கக்கூட இல்லை. விஜய் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் அவருக்கு ஓட்டுப்போட்டு முதலமைச்சர் ஆக்குவோம் என நெகிழ்ச்சியோடு கூறினார்கள்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!