“வரலக்ஷ்மி புருஷனுக்கு தங்கச்சி மாதிரி இருக்குற”… சோபிதாவை கலாய்த்த நெட்டிசன்ஸ் (வீடியோ)

Author:
12 August 2024, 11:32 am

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகையான சோபிதா துலிபாலா திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் வடிவழகியாக தனது கெரியரை தொடங்கினார். மாடல் அழகியாக இருக்கும்போது பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவருக்கு மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. முன்னதாக இவர் 2013 “ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013” பட்டத்தை பெற்று கௌரவிக்கப்பட்டார். அதன் பிறகு அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் வெளிவந்த இராமன் ராகவ் 2.0 என்ற திரைப்படத்தில் நடித்த துலிபாலா திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார் .

அதை தொடர்ந்து அமேசான் வீடியோவில் நாடகத்தொடராக வெளிவந்த “மேட் இன் ஹெவன்” என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார். இந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதனிடையே துலிபாலா பிரபல தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரானாக நாக சைதன்யாவை ரகசியமாக காதலித்து ஆகஸ்ட் 9ம் தேதி மிகவும் எளிமையான முறையில் நாகார்ஜுனாவின் வீட்டிலேயே நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சோபிதா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் ஊஞ்சல் ஆடுவது போன்ற அழகான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் சோபிதா பார்ப்பதற்கு வரலட்சுமி கணவர் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ்வின் தங்கச்சி போலவே இருப்பதாக கலாய்த்து ரோல் செய்து வருகிறார்கள். சோபிதா தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி வடிவமைத்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ:

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!