90ஸ் கிட்ஸ்களுக்கு மிக பிடித்தமான ஒரு தொகுப்பாளர் என்றால் அது பெப்ஸி உமாதான். அவருடைய நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சாதாரணமாக ஒரு போன் காலில் பேசி உங்களுக்கு பிடித்த பாட்டை சொன்னால் அவர்கள் ஒளிப்பரப்புவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் வட்டம் உண்டு.
இந்த நிகழ்ச்சியை 18 ஆண்டுகள் தொகுத்து வழங்கியவர் உமா. அவர் கடைசியில் சொல்லும் Keep Trying. Keep Trying Better Luck Next Tume என்ற வசனம் இன்னும் பலருக்கு ஞாபகம் இருக்கும்.
அவரின் முகத்தோற்றம், குரல் என அவரை பிடிக்க பல காரணங்களை 90ஸ் கிட்ஸ்கள் கூறுவார்கள். இப்படி கனவுக்கன்னியாக இருந்த உமா சினிமா உலகம் ஏன் விட்டு வைத்தது என யோசிப்பீர்கள்?
ஆனால் சினிமா உலகம் அவரை விட்டு வைக்கவில்லை. அவருக்கு சினிமா வாய்ப்புகள் கொட்டிக்கிடக்க, தனக்கு டிவி வாழ்க்கையே போதும் என சினிமாவை திரும்பி கூட பார்க்கவில்லையாம். பல கோடிஸ்வரர்கள் பெப்சி உமாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட நேரத்தில், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து பெப்சி உமா விலகிவிட்டாராம். மேலும், ஒரு பிரபல அரசியல்வாதி பெப்சிமாவை அடிக்கடி தொந்தரவு செய்தும் உமா மறுத்துவிட்டதாகவும் அவர் தொடர்ந்து பெப்சி உமாவிற்கு டார்ச்சர் செய்ததாகவும் அப்போதே, தகவல்கள் வெளியானது.
புகழின் உச்சத்தில் இருந்த பெப்சி உமாவிற்கு பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்திலும், கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அருணாச்சலம் படத்திலும், நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் ரஜினியே போன் செய்து நடிக்க அழைப்பு விடுத்தும். பெப்சி உமா பட வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம்.
மேலும், இதனிடையே, தொழிலதிபரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் பெப்சி உமா செட்டிலாகி விட்டார். அண்மையில் விருது விழாவில் கலந்துகொண்டு பேசிய பெப்சி உமா ஒரு ஷாக்கிங் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அப்போது, ஃபோனில் பேசிய ரஜினி பெப்சி உமாவிடம் எனக்கு உங்க பக்கத்துல எந்த பிரபலம் இருந்தாலும், கண் போகாம உங்க பக்கமே போகிறது என்று சொன்னாராம். அது ராக்கிங் மாதிரி இருந்தாலும், இதை நான் சொன்னதே கிடையாது என்று பெப்சி உமா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். தற்போது, இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே, ரஜினிகாந்த் தன்னை தொட்டு பயமுறுத்துவதாக ரம்பா அளித்த பேட்டி வைரலாகி வரும் நிலையில், அதைத்தொடர்ந்து, பெப்சி உமாவையும் ரஜினிகாந்த் ராக்கிங் செய்து இருக்கிறார் என்று பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.